Wednesday, 9 July 2014

உனக்காக ஒரு கடிதம்

கடிதம் என்ற ஒன்று மறைந்து போன இந்த சமூகத்தில் நீ வாசிக்க போவதில்லை என தெரிந்தும் எழுதுகிறேன் ஒரு கடிதம், உணர்வை என்று."கேளுங்கள் தரப்படும்" என்னும் விவிலிய வார்த்தைக்கு ஏற்ப நான் கேட்காமலும் நீ தராமலும் போன நம் காதல் என்றுமே பூக்காத மலருக்கு மணமாய் போனதை nan அறிவேன்.நாம் இருவரும் கைஅசைத்து பிரிந்த நிமிடத்தை மீட்டெடுக்க முயலும் நான், அனைத்தையும் இழக்கிறேன் வாழ்க்கையையும் கூட.நீ அறிவாயா மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் மரங்களுக்கு நடுவே நாம் கைகோர்த்து செல்வதாய் கனா கண்ட நாள் அன்று தான் உன் மணநாள் பற்றிய செய்தியை நான் அறிந்தேன் .உன் எலுமிச்சை நிற மேனியை தீண்டும் காற்றை போல உன்னை சுற்றியே என் நினைவுகள் சுழன்று கொண்டிருக்கும் .என் மேன்சோகங்களை நீ அறிவாயா?.என் விழிவழியே அறியா உலகை உன் விழியில் கண்ட நான் இன்று இருள் ஒளியில் சுருண்டு கிடக்கிறேன்.எல்லாமும் உன்னை ஞாபக படுத்துகிறது, ஆம் எல்லாமும் ஆன நீ எல்லாவற்றிலும்   நிறைந்திருக்க தான் செய்வாய்.மடலுக்கான காரணம் என்ன என்று திகைக்கிறாயா? உன் நினைவாய் கடைசியாய் இருந்த உன் புகைப்படத்தை தொலைத்து விட்டேன், உன் நினைவுகளை தொலைக்க முடியாமல்.எல்லோரும் கடந்து செல்லும் என் வரிகளின் வலியை  நீ மட்டுமே அறிவை என்ற கர்வத்தில் எழுதுகிறேன்.

Saturday, 21 June 2014

திருவிழாக்கள்
இளம்பிராயத்தில் புது ஆடைகளுக்க்காகவும்  நிகழ்ச்சிகளுக்க்காகவும்  திருவிழாக்களை கொண்டாடிய நாட்கள் காலசக்கரத்தில் வண்ணமிடப்பட்ட நாட்கள். ராட்டினங்களும் ஆடல் பாடல்களும், இரவு நேர பரோட்டக்களும் ,கரகாட்டங்களும் , அர்த்தமறிய வசனங்களும், ராமராஜன், விஜயகாந்த் படங்களும் எத்தனை காரணங்கள் திருவிழாவை கொண்டாட. இத்தனை நாட்கள் எங்கு தான் மறைந்து இருப்பார்களோ அந்த தாவணி தேவதைகள். திருவிழாவிற்கு வருகை தரும் மாமா, அத்தை மகள்களை பெற்றவர்கள் பாக்கியவான்களே. இரவையும் உறக்கத்தையும் மறக்க செய்யும் திரு விழாக்கள் தாங்கள் கதாநாயகன் என்ற உணர்வை எல்லோருக்குள்ளும் விதைத்து விட்டு தான் போகிறது. எல்லா விழாக்களிலும்  அரிசியில் பெயர் எழுதுவதும் அவள் பெயரின் முதல் எழுத்தில் கீ செயின்  வாங்குவதும் வழக்கமாகவே மாறிவிட்டது அன்று.டவுசரிலே சுத்தும் நாங்கள் சேலைக்கு மாறிவிட்ட வகுப்பு தோழியை  கண்டு வெட்கம் கொள்ளுவதும்,  வெடித்து சிரித்தே பார்த்த நாங்கள் அவளது குருஞ்சிரிப்பையும், வெட்கத்தையும் அந்த நொடி பொழுதே காண இயலும் .திருவிழாக்கள்  எப்போதுமே பெண்களுக்கணாதே . முளைப்பாரியும் அதற்கு பாடும் முளைப்பாரி பாடலும் இன்றும் கேட்கிறது எங்களுக்கு, தாயின் தாலாட்டு பின் ஆண்கள் உருகி கேட்கும் மற்றொரு பெண்ணின் பாடல். மஞ்சள் வண்ண பட்டு பாவாடையும், அரக்கு நிற தாவணி உடுத்தும் அனைத்து பெண்களுமே தேவதைகள் தான்.

Friday, 23 May 2014

சினிமா பார்த்த கதை

சினிமா பார்ப்பது எளிதாகி விட்டது இன்று. அன்று  ஒவ்வொரு படம் பார்த்த  நிகழ்வும் பசுமையாகவே உள்ளது, சினிமா என்னை ஒரு கதை சொல்லியாகவே மாற்றி விட்டது,நினைப்பதை எழுதவும், சொன்னதை செய்யவும் என்னால் முடியாது. என் ஞாபத்தில் அமைதி படை நான் பார்த்த முதல் படம், திருவிழாவிற்கு திரை கட்டி போட்ட படம், என் அப்பாவின் தோலில் பயணம் செய்து பார்த்த படம். அடுத்து மாநகர காவல் தத் யில் பார்த்தேன். விஜயகாந்த் அறிமுக காட்சியில் நடந்து வரும் தோரணை யை பற்றி நானும் என் நண்பனும் பள்ளி பிரேயரில் பேசி மகிழ்ந்த தருணங்களை இன்றைய  சினிமாவும் தருவதில்லை நாமும் கவனிப்பதில்லை.ரஜினி கமலை காட்டிலும் கிராமத்து இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விஜயகாந்த் இருந்துள்ளார்.கேப்டன் பிரபாகரன் படம் பார்க்க பல கோவில் திருவிழா சென்று முடியாமல் திரும்பி வந்துள்ளோம், ஏனெனில் முதல் திரை படம் பக்தி திரை படம் என்பதால் அது முடிவதற்குள் தூங்கி விடுவோம். இன்று யு டூப்பில் கேப்டன் பிரபாரன் திரை படம் உள்ளது ஆனால் அன்று இருந்த ஒரு உற்சாகம் இன்று இல்லை, பால்யங்களில் சினிமா பார்ப்பது என்பது ஒரு பயணம் போலவே இருந்தது...

Wednesday, 25 July 2012

காத்திருப்புகள் காரணமின்றி நிகழுவதில்லை
சில காத்திருப்புகள் கண்ணீரையும் கவிதையான நினைவுகளையும்
தருகின்றன
காரணமின்றி கண்ணீர் வந்துவிடுகிறது
காதல் வருவதில்லை...
தனிமையான பொழுதுகளில்
இனம் புரியாத சோகம் போல் நிகழுகிறது
உன் நினைவுகளின் வலி

Tuesday, 17 July 2012

தூக்கம் இல்லா துன்பமான இரவுகளை தந்தாய்
தனிமையில் நினைவுகளை துணையாக தந்தாய்
இசையை போல் உன் நினைவும்
இரைச்சலை போல் பிரிவையும் தந்தாய்
பிரிவின் வலியை கூற வார்த்தை இல்லையடி
சுழலில் சிக்கிய துரும்பை போல்
சிக்கி கொண்டேன்
கண்ணீரையும் கவிதையையும் போல்
வருகிறாய்
வார்த்தைகளை முடக்கிவிட்டு
மௌனத்தை பதிலாக தருகிறாய்...
சோகம் இல்லை இந்த வாழ்வில்
ஆனால் தனிமை என்னும்
தண்டனை தருகிறாய்..
காரணமின்றி தவிக்கிறேன்..
அணைக்கும் நம் தேகங்களுக்கு இடையே
உண்டாகும் வெப்பம் சூரியனையே சுட்டெரிக்கும் வெப்பம்